நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 10

செ.குளோரியான்

பாடல் 10

தகவு அன்று என்று உரையீர்கள், தடம் புனல்வாய் இரைதேர்ந்து
மிகல் இன்பம் பட மேவும் மெல் நடைய அன்னங்காள்,
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அகமேனி ஒழியாமே திருமூழிக்களத்தார்க்கே.

பெரிய நீர்நிலைகளிலே இரை தேடிக்கொண்டு மிகுந்த இன்பத்தோடு திரியும் மென்மையான நடையைக்கொண்ட அன்னங்களே, எம்பெருமானை எண்ணி என்னுடைய மேனி மிகவும் மெலிகிறது, மேகலையும் கழன்றுவிட்டது, இப்படியே சென்றால் என்னுடைய அகமேனியாகிய ஆன்மாவும் ஒழியக்கூடும், அதற்குமுன்னால், திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம் சென்று, ‘இவ்வாறு இப்பெண்ணை வருத்துவது உங்களுக்குத் தகுதியானதில்லை’ என்று சொல்லுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் கொடியேற்றம்

காவலரிடம் தகராறு: 2 இளைஞா்கள் கைது

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னௌ!

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

SCROLL FOR NEXT