நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்

பாடல் 4

நாளேல் அறியேன் எனக்கு உள்ளன, நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீள் ஆர் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்
வாள் ஏய் தடம் கண் மடப்பின்னை மணாளா.

உயர்ந்த, நிறைய பூக்களைக்கொண்ட மலர்ச்சோலைகள் சூழ்ந்திருக்கும் திருநாவாயிலே எழுந்தருளியிருக்கும் பெருமானே, வாள்போன்ற நீண்ட கண்களையுடைய இளம் நப்பின்னைப் பிராட்டியின் மணாளனே, உனக்கு என்றென்றும் அடிமைசெய்யவேண்டும் என்று நான் வந்தேன், ஆனால் அந்தப் பாக்கியம் எனக்குக் கிடைக்கப்போகும் நாள் எதுவோ, எனக்குத் தெரியவில்லையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT