நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3

செ.குளோரியான்


பாடல் 3

பிடித்தேன், பிறவி கெடுத்தேன், பிணி சாரேன்,
மடித்தேன் மனைவாழ்க்கையுள் நிற்பது ஓர் மாயையை,
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான்
அடிச் சேர்வது என் எனக்கு எளிது ஆயினவாறே.

எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்தேன், அவருடைய அருளாலே என்னுடைய பிறவி நோயைப் போக்கிக்கொண்டேன், இனி எனக்கு நோய்கள் வராதபடி செய்துகொண்டேன், குடும்ப வாழ்க்கையிலே இருக்கிற மாயையை விலக்கிக்கொண்டேன், கொடிகள் பறக்கும் கோபுரங்களோடு மாடங்கள் சூழ்ந்த திருப்பேரிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திருவடிகளைச் சேர்வது எனக்கு எளிதாக இருக்கிறதே, இது என்ன அதிசயம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT