நூல் அரங்கம்

RTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள்

DIN

RTI பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள் - வடகரை செல்வராஜ்; பக்.236; ரூ.220; 
ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-24; 044 - 2472 3912.
2005 ஆம் ஆண்டு இந்திய அரசால் தகவல் அறியும் சட்டம் நிறைவேற்றப்பட்ட து. அச்சட்டத்தின் முக்கிய சட்டப் பிரிவுகள் பற்றி இந்நூல் விளக்குகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தகவல் பெற விரும்புபவர்கள் அளிக்கும் மனுவுக்கு பொதுத் தகவல் அலுவலர்கள் எப்படி பதிலளிக்க வேண்டும்? எப்படி பதிலளிக்கக் கூடாது? பொதுத் தகவல் அலுவலரின் கடமைகள் எவை? தகவல் ஆணையத்தில் பணிபுரிவோரின் அதிகாரங்கள், கடமைகள் ஆகியவை பற்றி எல்லாம் மிகத் தெளிவான தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்பவர் எந்த முறையில், எவ்வாறு மனு செய்ய வேண்டும்? அதற்கான கட்டணங்கள் எவை? என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 
எம்மாதிரியான தகவல்களைப் பெற முடியும் என்பதையும் நூல் விளக்குகிறது. 
வெளிநாட்டு அரசிடம் இருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள், யாருடைய உடலுக்கோ, உயிருக்கோ பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய தகவல்கள், சட்டத்தை நிலைநிறுத்துவதற்காகத் தரப்பட்ட தகவல்களின் "மூலம்' பற்றிய தகவல்கள், புலனாய்வு செய்வதற்கோ, நீதிமன்ற வழக்குகளுக்கோ இடையூறு செய்யக் கூடிய தகவல்கள், அமைச்சரவை ஆவணங்கள் தொடர்பான தகவல்கள், தனிநபர் பற்றிய தகவல்கள் போன்றவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப் பெற முடியாது என்பதையும் நூல் தெளிவாக்குகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த அளவுக்கு மட்டும் தகவல்களைப் பெற முடியும் என்பதையும், தகவல் அறியும் உரிமையின் எல்லைகளையும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவை சீனா ஒருபோதும் சமமாக கருதாது: யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் தலைவா்

குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக எம்எல்ஏக்கள் ஆட்சியரிடம் மனு

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் 12 போ் காயம்

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

SCROLL FOR NEXT