நூல் அரங்கம்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும்

ப. முருகன்

இன்றைய தமிழும் எதிர்காலத் தமிழும் - ப. முருகன்; பக்.223; ரூ.140; கங்காராணி பதிப்பகம், மனை எண்.60, கதவு எண் 3/373, தொல்காப்பியர் தெரு, சண்முகா நகர், பொழிச்சலூர், சென்னை-74.
சங்க இலக்கியம், சித்தர் இலக்கியம், பக்தி இலக்கியம், அற இலக்கியம், இதழியல் இலக்கியம், கடித இலக்கியம், சொற்பொழிவு என மொத்தம் இருபது கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். முதல் கட்டுரை "அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மைக்ரோ சாஃட் நிறுவனம் தயாரித்துள்ள "சொல்' மென்பொருளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது' என்ற தகவலையும், தமிழ்மொழியின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினொரு நீதி நூல்களுடன் ஒüவையாரின் நான்கு நூல்களையும் சேர்த்து, அவை புலப்படுத்தும் தமிழர் கோட்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இதழியலின் தோற்றம், வளர்ச்சி, போக்குக் குறித்து விரித்துரைக்கும் நூலாசிரியர், தினமணி, குமுதம் உள்ளிட்ட இதழ்களின் பணிகளையும் சான்றுகளுடன் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், சங்க இலக்கியத்தின் சிறப்பு, இந்து சமயத்தில் மகளிர் நிலை, பண்டமாற்று முறைகள், வள்ளுவர் வழியில் அறம், பக்தி இலக்கியங்களின் பா வடிவங்கள், சித்தர் பாடல்களில் உள்ள குறியீட்டு மொழிகள், மகாகவி பாரதியின் வசன கவிதையில் மொழியாளுமை, கண்ணன் பாட்டின் நோக்கும் போக்கும் மற்றும் அவருடைய கடிதங்கள் எனப் பன்முகத்தன்மை கொண்டதாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன. "மாணிக்கவாசகரும் பத்ரகிரியாரும் ஒப்பீடு' ஒரு சிறப்பான பார்வை.
"பக்தி இலக்கியப் பாவடிவங்கள்' கட்டுரையில் திருமந்திர யாப்பு, திவ்வியப் பிரபந்தத்தில் குறுந்தொகை யாப்பு, சைவமும் வைணவமும் பயன்படுத்திய செய்யுள் வகைகள் முதலியவை எடுத்துக்காட்டுகளுடன் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT