நூல் அரங்கம்

காச்சர் கோச்சர்

கே.நல்லதம்பி

காச்சர் கோச்சர் - கன்னட மூலம்: விவேக் ஷான்பாக்; தமிழில்: கே.நல்லதம்பி; பக்.104; ரூ.125; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்; )04652 - 278525.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் வெவ்வேறு உலகங்களைச் சித்திரிக்கும் நாவல். 
ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இருந்த சிந்தனை, வாழ்க்கைமுறை, மனோபாவம், பழக்க, வழக்கங்கள் எல்லாம், அவர்களுக்கு வசதி வந்த பிறகு மாறிப் போய்விடுகிறது. வேலைக்குப் போய் தனது முதல் சம்பளத்தில் அம்மாவுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மகன், வசதி வந்த பிறகு சொந்தத் தொழிலைக் கூட கவனிக்காமல், சம்பாதிப்பதில் விருப்பமில்லாமல் சோம்பேறியாகத் திரிகிறான். அதற்கு நேர்மாறாக, அவனுடைய மனைவியோ அவன் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். சொந்தத் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தும் சித்தப்பா, அதை வளர்க்க எத்தகைய வழிமுறைகளையும் கையாள வேண்டும் என்று நினைப்பவர், அதையே அவர் தன்னுடன் பழகிய பெண்ணைவிட்டு பிரிவதில் பிரயோகிக்கிறார். எப்போதும் நேர்மையை விரும்பும் அப்பாவும், கணவனை வெறுத்து பிரிந்து வாழும் மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் , பல்வேறு திசைகளில் பயணிப்பதை மிக அற்புதமாக இந்நாவல் சித்திரிக்கிறது. 
பெண்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் சித்ராவும், அதுகுறித்து தீவிரமாகச் சிந்திக்கும் அனிதாவும் இன்றைய வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கும் பெண்களே. பட்டம் விடும் நூல் உருண்டைகள் ஒன்றுடன் ஒன்று கலந்து சிக்கலான பிறகு, (அந்தச் சிக்கலுக்குப் பெயர்தான் காச்சர் கோச்சர்) அவற்றை விடுவிப்பது எவ்வளவு சிரமமோ அதைப் போலத்தான் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளும் என்று சொல்லும் நாவல். உயிர்ப்பான மொழிபெயர்ப்பு, நாவலில் நம்மை மூழ்கடித்துவிடுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT