நூல் அரங்கம்

மிஸா கொடுமை

விசிட்டர்' அனந்த்

மிஸா கொடுமை - "விசிட்டர்' அனந்த்; பக்.304; ரூ.200; நக்கீரன் வெளியீடு, சென்னை-14; 044 - 4399 3000.
1975 ஜூன் 25-இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதற்கான பின்னணியை, காரணங்களை விளக்கும் இந்நூல் நெருக்கடி நிலை காலத்தில் நாட்டில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலைகளைப் பற்றிய பல தகவல்களை அளிக்கிறது. 
இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தி கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை செய்ய உத்தரவிட்டது, சிறுவனிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் வரை பலவந்தமாக குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது, நெருக்கடி நிலையை எதிர்க்கும் அரசியல் கட்சியினரை, போராட்டக்காரர்களை எந்தவித விசாரணையும் இல்லாமல் கைது செய்து, சித்ரவதை செய்தது, கொன்றது, கேரளாவில் ராஜன், தமிழகத்தில் சீராளன் உட்பட பலரைக் கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கியது. என இந்தியா முழுமையும் நடந்த பல கொடுமைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டிஇருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் அவசர நிலைக்கெதிராக எழுந்து நின்று, போராட்டங்களை ஒருங்கிணைத்தது, அவசரநிலைக் காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது, அதன் தலைவர்கள் பலர் மிஸா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது, சிறையில் சித்ரவதை செய்யப்பட்டது என பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. 
அவசரநிலைக் காலத்தில் பத்திரிகைகளின் சுதந்திரம் மறுக்கப்பட்டது, செய்திகள் தணிக்கை செய்யப்பட்டது, அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது, இந்தியன் எக்ஸ்பிரஸ் அவசரநிலையை எதிர்த்தது, எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு எதிராக அரசு தரப்பு முறைகேடான பல நடவடிக்கைகளை எடுத்தது , ஸ்டேட்ஸ்மன் பத்திரிகையின் மீதான நடவடிக்கைகள் என ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட பல நிகழ்வுகளை இந்நூல் விளக்குகிறது. இன்றைய இளையதலைமுறையினர் அவசரநிலைக் காலத்தின் கொடுமைகளைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT