நூல் அரங்கம்

சித்திரம் பேசுதடி சிவத்தை சொல்லுதடி

DIN

சித்திரம் பேசுதடி சிவத்தை சொல்லுதடி -தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா; பக்.672; ரூ.1001; ஓங்காரம், புதுச்சேரி- 1; 0413- 2335551.
 இந்த பிரபஞ்சத்தில் காணும் அனைத்துமே சித்திரங்கள். சிவத்தின் பெருங்கருணையின் பேரருளால் அவை வெளிப்படுகின்றன. இந்த உலகம் இயங்குகிறது. எல்லாமே சித்திரங்கள்தாம். பசு, பாம்பு, சிங்கம்.. எல்லா உயிரினங்களும் 600 கோடி மக்களும் சித்திரங்கள்தாம். இவ்வாறு தாம் காணும் அனைத்தையும் சித்திரமாகக் காண்கிறார் நூலாசிரியர் .
 "கனவுகள் அசாத்தியமானவை. அவை நமக்கு நடக்கப்போகும் விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன. இந்த மாபெரும் சக்தி ஜீவன்களில் இன்று குறைந்துவிட்டது. மாயையிலேயே வாழ வாழ, இத்தகைய கனவு சக்தி முற்றிலும் தன் கதவுகளை சாத்திக் கொண்டு நிரந்தரமாக வெளியேறிவிடும். இப்போது ஜீவன்கள் காணும் கனவெல்லாம் மிகச் சாதாரணமானவை. நம் உள்ளொளி பெருகி அனைத்தும் பிரம்மம் என்று உணரும் போது சக்தி வாய்ந்த இந்தக் கனவுகள் நமக்கு வழிகாட்டும்' என்கிறார் சுவாமிகள்.
 புதுச்சேரி சுவாமிகள் ஓங்காரநந்தாவை தமது பரிபூரண குருவாக ஏற்று, ஓங்காரநந்தா ஆசிரமத்தில் தம்மை இணைத்துக் கொண்டு சக்தியின் அம்சமாக ஆன்மிக அருட்பணியாற்றி வருகிறார் துறவி லட்சுமிபாய் . இவர், புதுச்சேரி அரசினர் பள்ளிகளில் 35 ஆண்டுகள் இசை ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆத்ம ஞானம் பெற்று விளங்கும் இவ்வன்னை, ஸ்ரீ வித்யையின் பரிபூரணத்தை உணர்ந்தவர்.
 தசமஹா வித்யா பூஜைகள் செய்து மக்கள் பயனுற, தம் வாழ்க்கையை இறைப் பணிக்காகவே அர்ப்பணித்த ஆயிரம் பிறை கண்ட மாதரசி. இவரது 80 ஆவது பிறந்தநாள் மலராக ஆன்மிக அருள்கருத்தால் நிரப்பப்பட்ட பக்தி ரசமாக (சந்தோஷம்) பகிரப்பட்டுள்ளது இந்த நூல்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT