நூல் அரங்கம்

உயிர்மெய்

கு.சிவராமன்

உயிர்மெய் - கு.சிவராமன்; பக்.224; ரூ.185;  விகடன் பிரசுரம், சென்னை-2; )044 - 4263 4283. பருவ வயது தொடங்கும் ஆண், பெண் உடல்களில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவது தொடங்கி, திருமணமாகி அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது வரை ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்னைகளைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நூல். 
தைராய்டு பிரச்னை, ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் கருத்தரிப்பதில் பல தடைகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தடைகளைத்
தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. 
ஆண்-பெண் உறவு தொடர்பான அனைத்து கற்பிதங்கள், நம்பிக்கைகளின் உண்மைத்தன்மைகளை இந்நூல் எடுத்துக்காட்டி, அது தொடர்பான மன உளைச்சலில் சிக்கி வருந்திக் கொண்டிருப்பவர் களுக்கு வழிகாட்டுகிறது.
சிறப்பான மணவாழ்க்கை, உரிய காலத்தில் குழந்தைப் பேறடைதல் ஆகியவற்றுக்கு எவ்வாறெல்லாம் உடலையும் மனதையும் ஒழுங்கு செய்து கொள்ளவேண்டும் என்று விளக்கும் இந்நூல், கொள்ள வேண்டிய உணவு வகைகள், செய்ய வேண்டிய உடல், மனப் பயிற்சிகளையும் எடுத்துச் சொல்கிறது. நவீன, செயற்கையான, இயந்திரமயமான வாழ்க்கையில் இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுத் தரும் சிறந்த நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT