நூல் அரங்கம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம்

DIN

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம் அறிவோம் அவசியம் - கு.கணேசன்; பக்.445; ரூ.450; காவ்யா, சென்னை-24; ) 044- 2372 6882.
 நாம் உட்கொள்ளும் உணவுகள், அவற்றில் அடங்கியுள்ள சத்துகள் பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது. தனக்குத் தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து, எந்த அளவு உண்ண வேண்டும் என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள முடியும். உணவு தொடர்பாக நம்மிடம் இருக்கும் பல கருத்துகள் எவ்வாறு அறிவியலுக்குப் புறம்பாக இருக்கின்றன என்பதையும், நம்மால் ஒதுக்கப்படும் அல்லது விரும்பி உண்ணப்படும் பல உணவுகள் நம் உடலுக்கு எந்த அளவுக்கு உகந்தவையாக இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
 எந்தக் கீரையில் என்ன சத்து? குழந்தைகளுக்கு என்ன உணவு? குழந்தைகளுக்கு பால் பவுடர் கொடுக்கலாமா? கர்ப்பிணிக்கு, பாலூட்டும் தாய்க்கு, வயதானவர்களுக்கு என்ன உணவு? சர்க்கரை நோய், இதய நோய், அல்சர், சிறுநீரகப் பாதிப்பு, காமாலை, மலச்சிக்கல் ஆகிய உடல் பாதிப்புகள் உள்ளவர்கள் எவற்றை உண்ண வேண்டும்?
 ஒவ்வொரு எண்ணெய்யிலும் உள்ள சத்துகள் எவை? எந்த எண்ணெய்யை யார் பயன்படுத்த வேண்டும்? யார் பயன்படுத்தக் கூடாது? இதய நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா? எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? என மிகவும் எளிமையாக, அறிவியல் பூர்வமாக உணவைப் பற்றிய பல தகவல்களை அள்ளித் தரும் இந்நூல், உண்மையிலேயே ஒரு "நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்' தான். மக்களுக்குப் பயன்படும் அரிய நூலை எழுதிய நூலாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT