அமுதசுரபி - பக்.244; ரூ.175.
ஆன்மிகம், வரலாறு, சிறுகதை, கட்டுரை, கலை, வாழ்வியல், மருத்துவம் என பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்த தீபாவளி மலர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதழியல் முன்னோடிகள் கல்கி சதாசிவம் கே.ஆர்.வாசுதேவன் பற்றி முறையே சுவாமி கமலாத்மானந்தர், வா.மைத்ரேயன் ஆகியோர் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
எஸ்.சங்கரநாராயணன், வாஸந்தி, ஜே.எஸ்.ராகவன் உள்ளிட்ட ஒன்பது எழுத்தாளர்களின் சிறுகதைகள் மலருக்குப் பெருமை சேர்க்கின்றன. ராமர் பட்டாபிஷேக காட்சி மணியம் செல்வனின் கைவண்ணத்தில் அட்டையில் வண்ண ஓவியமாய் பிரகாசிக்கிறது. மலர் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அட்டைப் படக் கதையை எழுதியுள்ளார். பட்டாபிஷேகத்தை பரமசின் பார்வதி தேவியுடன் மாறுவேடத்தில் காணச் செல்வதாக கதை அமைந்துள்ளது.
சிற்பி, ரமணன், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் என பத்துக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகள் மணம் வீசுகின்றன.
சுதா சேஷய்யனின் "பாரதி இயல்', தி.இராசகோபாலனின் " தீபம் நா.பார்த்தசாரதி', நரசய்யாவின் "பயண இலக்கியம்', இந்திரா பார்த்தசாரதியின் " கலாசார திரிசங்கம்', பெ.சிதம்பரநாதனின் " மதமான பேய்' கட்டுரைகள் வாசகர்களுக்குப் பல்சுவை விருந்து.
ஓவியர் மாருதியுடன் ஒரு சந்திப்பு, "கிளிக்' ரவியின் கட்டுரை கச்சிதம். "பயிற்சியும், முயற்சியும் தொடரும் வரையில் கலை நம்மைக் கைவிடாது' என்கிறார் மருது. முத்திரை பதித்தஅவரின் கருத்து மிகையல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.