நூல் அரங்கம்

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்

DIN

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்(மூன்று பாகங்கள்) - மு.க.ஸ்டாலின்; பாகம் -1;பக்.396; ரூ.360; பாகம் -2; பக்.320; ரூ.290; பாகம் -3; பக்.378; ரூ.340; பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108; )044- 2526 7543.
 தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1989 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 - ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் (1989-90 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கை மீதான உரை ஆற்றுகிறார். அப்போதிருந்து 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 - ஆம் தேதி அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் வரை அனைத்தும் இந்நூலின் மூன்று பாகங்களில் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கின்றன.
 சட்டமன்ற உரை, வரலாற்றில் பதிவு செய்யப்படும் ஒன்றாக மாறிவிடும் தன்மையுடையது; பிற்காலத்திற்கான ஆதாரமாகவும் அது விளங்கும்.
 எனவே தமிழக சட்டப் பேரவையில் 36-ஆவது வயதில், உறுப்பினராக நுழைந்த ஸ்டாலின், பேரவையில் உரை நிகழ்த்த எப்படியெல்லாம் தயாரிப்பு பணிகளைச் செய்தார் என்பதை "என்னுரை'யில் விளக்கியிருக்கிறார். தேடிச் சேகரித்த தரவுகள், குறிப்புகள் ஆகியவற்றை சரிபார்த்து அதற்கென நேரம் செலவழித்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
 இந்நூலின் பாகம் - 1 - இல் நிதிநிலை அறிக்கை, ஆளுநர் உரை மீதான விவாதங்களும், பாகம் -2 - இல் நகராட்சி நிர்வாக, ஊராட்சி மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும், பாகம் - 3 -இல் பல்வகைப் பொருள்கள் எனவும் பிரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.
 அவற்றில் நீட் தேர்வு, கெயில் எரிவாயுக் குழாய் பதிப்பு, கச்சத்தீவு, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், மீத்தேன் அனுமதி, குட்கா வழக்கு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றில் திமுகவின் நிலைப்பாடு குறித்த உரைகளும் உள்ளன.
 ஆதாரங்களுடன் கூடிய உரைகளின் தொகுப்பாக, சரித்திர நிகழ்வுகளாக, புள்ளி விவரப் பேச்சுகளின் தொகுப்பாக இந்நூல் வெளி வந்திருக்கிறது.
 அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு சிறந்த கையேடு, வழிகாட்டி இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT