தினம் ஒரு தேவாரம்

49. பண்காட்டி படியாய - பாடல் 5

என். வெங்கடேஸ்வரன்

பற்றவன் கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன் சடையான் உயர் ஞானங்கள்
கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால்    
செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

பற்றவன் = அனைத்து பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடாக இருப்பவன். கயவர் = கீழ்மைக் குணம் கொண்டவர்கள். இந்த சொல் மூலம், திரிபுரத்து அரக்கர்கள், வைதீக மதத்தையும் சிவநெறியையும் நிந்தித்த செய்கை உணர்த்தப்படுகின்றது. செற்றவன் = வெற்றிகொண்டவன். முனிவர்களும் தவசிகளும் சடை வைத்து இருப்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் எவரும் சடையான் என்று அழைக்கப்படுவதில்லை. அனைவர்க்கும் முதல் முனிவனாகத் திகழும் பெருமான்தான் சடையான் என்று அழைக்கப்படுகின்றான்.

பொழிப்புரை

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுக்கும், உயிர்களுக்கும் பற்றுக்கோடாகத் திகழும் இறைவன், கங்கை நதியையும் பாம்பினையும் சந்திரனுடன் தனது சடையில் வைத்துக்கொண்டுள்ளான். அனைத்து முனிவர்களுக்கும் தவத்தோர்களும் முன்மாதிரியாக இருக்கும் சடையானாகிய அவன், உயர்ந்த ஞானங்களை இயல்பாகவே கற்றவன். கீழ் மக்களாகத் திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் மூன்று கோட்டைகளையும் ஓரே அம்பினால் வீழ்த்தி அவர்களை வென்ற பெருமான் உறைகின்ற வெண்காடு தலம் சென்று, நெஞ்சமே, நீ இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT