தினம் ஒரு தேவாரம்

74. நல்லர் நல்லதோர் - பாடல் 3

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 3:
    ஓதமார் கடலின் விடம் உண்டவர்
    ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம்
    மாதொர் கூறர் மழு வலன் ஏந்திய
    நாதர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
வலம் என்ற சொல் வலன் என்று திரிந்தது; ஆர்=பொருந்திய; ஓதம்=அலைகள்; 
   
பொழிப்புரை:
அலைகள் நிறைந்த கடலிலிருந்து எழுந்த நஞ்சினை உண்டு அனைவரையும் நஞ்சின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிய பெருமான் பிரமன் முதலாய தேவர்கள் அனைவர்க்கும் முன்னமே தோன்றியவர்; அவர் உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டவர், மழு ஆயுதத்தை தனது வலது கையில் ஏந்தியவர் ஆவார். இவ்வாறு அனைவர்க்கும் தலைவராக விளங்கும் பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT