Specials

வரகரசி பால் பொங்கல்

DIN

பொங்கல் பண்டிகையன்று வரகரசி பால் பொங்கல் செய்து குடும்பத்தாருடன் உண்ணலாம்.

தேவையானவை:

வரகரசி - 1 கிண்ணம், பாசிப்பருப்பு - 1 கிண்ணம், வெல்லம் - 100 கிராம், பால் - 3 டம்ளர், தேங்காய்த் துருவல் - அரை கிண்ணம், நெய் - 2 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய்ப் பொடி - 1 சிட்டிகை.

செய்முறை:

பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்தில் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் பால் கொதித்ததும், வரகரசி, பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, குழைய வேக விடவும்.

அடுப்பை மிதமான தணலில் வைத்து, வெல்லப் பாகை அதில் சேர்க்கவும்.

நெய், தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும். முந்திரி, திராட்சை, ஏலப் பொடியை நெய்யில் வறுத்து, கலவையில் சேர்த்து இறக்கவும்.

சுவையான வரகரசி பால் பொங்கல் தயார்.

- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT