முகப்பு
செய்திகள்

ஸ்டீவ் ஸ்மித் சதம், ஜடேஜா அபாரம்: ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள்

இந்திய அணி, தேநீர் இடைவேளையின்போது 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள்...

Updated On : 8 ஜனவரி 2021, 10:20 am IST
ரோஹித் சர்மா - ஜடேஜா
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 338 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் அபாரமாக விளையாடி சதமடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

Advertisement

Advertisement

முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. லபுசான் 67, ஸ்மித் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

ஸ்டீவ் ஸ்மித்

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்துள்ளது. மிகச்சிறப்பாக விளையாடிய ஸ்மித் 226 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் அவுட் ஆகி, கடைசியாக ஆட்டமிழந்தார். லபுசான் 91 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, சைனி தலா 2 விக்கெட்டுகளையும் சிராஜ் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி, தேநீர் இடைவேளையின்போது 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. கில் 14, ரோஹித் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments