உலகக் கோப்பை: வீரர்களின் குழு முயற்சியே காரணம்: ஸ்ரீகாந்த்
சென்னை, ஏப். 5: இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதற்கு, வீரர்களின் குழு முயற்சியே காரணம் என இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார். சென்னை விருகம்பாக்கத்தில் "லாரன்ஸ் அண்டு ம
சென்னை, ஏப். 5: இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதற்கு, வீரர்களின் குழு முயற்சியே காரணம் என இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் கூறினார்.
சென்னை விருகம்பாக்கத்தில் "லாரன்ஸ் அண்டு மாயோ' என்ற கண் கண்ணாடிக் கடையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அவர், இதுகுறித்து மேலும் கூறியது:உலகக் கோப்பையில் வெற்றி பெற்றதற்கு வீரர்களின் குழு முயற்சியே காரணம். தேர்வுக் குழு தலைவராக நான் இருக்கும்போது, உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
இதன் உண்மையான மதிப்பை இப்போது உணரமாட்டோம். மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டு சென்று விடுவோம். ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உலகக் கோப்பையை வென்றதன் உண்மையான மதிப்பை அனைவரும் உணர்வோம்.
Advertisement
உலகக் கோப்பை போட்டிகள் முழுவதிலும் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுபோல் காம்பீரும் சிறப்பாக விளையாடினார். ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை ஆல்-ரவுண்டர் நிலை என்பது மிகவும் சவாலானது. அந்த சவாலை மிகச் சிறப்பாக யுவராஜ் சிங் கையாண்டார். இறுதி ஆட்டத்தில் நிலைமையை உணர்ந்து, கேப்டன் தோனி செயல்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடினார் என்றார்.