முகப்பு
விளையாட்டு

எதிர்பார்த்ததும், எதிர்பாராததும்...

கிரிக்கெட்டில் எதிர்பாராத வெற்றிகள், எதிர்பார்க்காத அணிகளுக்குக் கிடைப்பதுண்டு. அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் கேட்கவே வேண்டாம். 2 முறை சாம்பியனாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளை 1983-ல் இந்தியா, வென்ற

விளையாட்டு

எதிர்பார்த்ததும், எதிர்பாராததும்...

கிரிக்கெட்டில் எதிர்பாராத வெற்றிகள், எதிர்பார்க்காத அணிகளுக்குக் கிடைப்பதுண்டு. அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் கேட்கவே வேண்டாம். 2 முறை சாம்பியனாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளை 1983-ல் இந்தியா, வென்ற

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:59 PM
பகிர்:

கிரிக்கெட்டில் எதிர்பாராத வெற்றிகள், எதிர்பார்க்காத அணிகளுக்குக் கிடைப்பதுண்டு. அதுவும் உலகக் கோப்பை போட்டிகளில் கேட்கவே வேண்டாம். 2 முறை சாம்பியனாக இருந்த மேற்கிந்தியத் தீவுகளை 1983-ல் இந்தியா, வென்று சரித்திரம் படைத்தது. 1996-ம் ஆண்டில் கோப்பையை வெல்லும் என்று ஒரு சதவீதம் கூட எதிர்பார்க்காத இலங்கை அணி வெற்றி வாகை சூடியது.

 இந்த உலகக் கோப்பை போட்டிகளில் சில அதிர்ச்சித் தோல்விகள் சில அணிகளுக்குக் காத்திருந்தன. இங்கிலாந்தை அயர்லாந்து அணி வீழ்த்தியது. கெவின் ஓ பிரையனின் அற்புதமான ஆட்டத்தால் இங்கிலாந்தை லீக் சுற்றில் அயர்லாந்து சாய்த்தது. அந்த ஆட்டத்தில் குறைந்த பந்துகளில் (50 பந்து) உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்தவர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டார் கெவின் ஓ பிரையன்.

 லீக் சுற்றில் கத்துக்குட்டி அணிகள் கனடா, கென்யா, அயர்லாந்து, நெதர்லாந்து, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் வெளியேறிவிட்டன. ஆனாலும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வங்கதேசமும் வீழ்த்தி தான் ஒரு கத்துக்குட்டி அணியல்ல என்பதை உலகுக்கு உணர்த்தியது.

 1996-ம் ஆண்டு முதலே வங்கதேச அணி, உலகக் கோப்பை போட்டியில் எதிரணியினருக்கு அதிர்ச்சித் தோல்விகளை அளித்து வந்துள்ளது. 1996-ல் மேற்கிந்தியத் தீவு அணிகளையும், 2007-ல் இந்திய அணியையும் வென்று லீக் சுற்றிலேயே வெளியேற்றியதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.

 ஆனால் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் புள்ளிகள் கணக்கில் பிந்தியதால் வங்கதேசம் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

 கத்துக்குட்டி அணிகள் போட்டியிலிருந்து எளிதில் வெளியேறிவிடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணித்திருந்தனர். அதைப் போலவே கத்துக்குட்டி அணிகள் வெளியேறிவிட்டன.

 ஆனால் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த 2 பலம் வாய்ந்த அணிகள் போட்டியிலிருந்தே வெளியேற்றப்பட்டுவிட்டன. 4 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், உலகக் கோப்பை போட்டிகளில் துரதிருஷ்டம் துரத்தும் தென் ஆப்பிரிக்காவும் தோல்வியடைந்தது யாரும் எதிர்பாராதது.

 லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளுடன், இந்தியா மோதியது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடையவேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினார்கள். காரணம். இந்த லீக் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவுடன் மோதவேண்டும் என்பதே. தோல்வி கண்டால் இலங்கையுடன் மோதி இந்தியா எளிதில் வெற்றி காணும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 ஆனால் திறம்பட விளையாடிய இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை கால் இறுதியில் சந்தித்தது. ஆமதாபாத் ஸ்டேடியம் ரன் குவிப்புக்கு ஏற்ற மைதானம் என்றாலும், இந்திய அணி சீரான பந்துவீச்சால், ஆஸ்திரேலியா 260 ரன்களில் கட்டுண்டது. ஆனால் ஃபார்முக்கு வராமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங், சதமடித்து ஃபார்முக்குத் திரும்பினார். அது ஒன்றே ஆஸ்திரேலியா ஆறுதல் பட்டுக் கொள்ளும் விஷயமாக அந்த ஆட்டத்தில் அமைந்தது.

 261 ரன்களில் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியாவுக்கு சச்சினும், சேவாகும் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடி வரும் சச்சின் அற்புதமாக விளையாடி அரை சதமடித்தார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18 ஆயிரம் ரன்கள் என்ற அபாரமான மைல்கல்லையும் எட்டினார். இவருக்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளில் ரன் குவித்திருப்பது ஜெயசூர்யா மட்டுமே. அவர் சுமார் 5 ஆயிரம் ரன்கள் பின்தங்கியுள்ளார் என்பதுடன், ஒரு நாள் போட்டிகளில் அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவருக்கு அடுத்தபடியாக இருப்பது ரிக்கி பாண்டிங் மட்டுமே. சச்சினின் சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் அவர் இன்னும் 150 ஆட்டங்களில் ஆட வேண்டியிருக்கும். அது நடக்காது என்பது மட்டுமல்ல... அதற்குள் சச்சினும் 20 ஆயிரம் ரன்களைத் தொட்டிருப்பார் என்று நம்பலாம்.

 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின், கம்பீரின் அற்புதமான ஆட்டத்தால் மெல்ல வெற்றிக் கோட்டை இந்தியா நெருங்கியது. இருவரும் ஆட்டமிழந்தாலும், யுவராஜும், ரெய்னாவும் ஆடிய அபாரமான ஆட்டத்தால் வெற்றி இந்திய அணியின் வசமானது. யுவராஜ் சிங்கின் அதிவேக ஷாட்களால் ஆஸ்திரேலியாவின் கனவுக் கோட்டை தகர்ந்தது. 4-வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் உலகக் கோப்பை தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.

 இந்த உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யுவராஜ் சிங்குக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது எதிர்பார்த்ததுதான்.

 இந்தியா-ஆஸ்திரேலியா கால் இறுதியைப் போலவே, மற்றொரு கால் இறுதி ஆட்டமும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது. அது நியூஸிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளிடையிலான ஆட்டம்தான்.

 முதலில் ஆடிய நியூஸிலாந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தாலும், அற்புதமான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தது நியூஸிலாந்து. ஜேக்கப் ஓரம், நாதன் மெக்கல்லம், செüதியின் சீரான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்காவின் கோப்பைக் கனவும் தகர்ந்தது.

 உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை துரதிருஷ்டம் துரத்துகிறது என்பது இந்தப் போட்டியிலும் உண்மையாகிவிட்டது. லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்த நியூஸிலாந்து, கால் இறுதியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை நொறுக்கியது என்பதே உண்மை.

 கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக நியூஸிலாந்தும் உருவாகிவிட்டது. அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம், ராஸ் டைலர், ஜெஸ்ஸி ரைடர், கப்டில் ஆகியோரது அதிரடியால் அந்த அணி வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருகிறது.

 அடுத்து முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது பாகிஸ்தான் அணி. இந்த உலகக் கோப்பையில் எழுச்சி பெற்ற அணியாக அது உருவாகிவிட்டது.

 லீக் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, அரையிறுதியில் இந்திய அணிக்கு சவால் அளிக்கக் காத்திருக்கிறது. கேப்டன் அப்ரிதி பந்து வீச்சு எதிரணியினரை திணறடித்து வருகிறது.

 இந்த உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் அவரே.

 இந்த உலகக் கோப்பைப் போட்டியில் எதிர்பாராதது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதுதான் ஒருநாள் கிரிக்கெட்...

முழு கட்டுரையைப் படிக்க →