சென்னை ஓபன்: நடப்பு சாம்பியன் வாவ்ரிங்கா வெளியேறினார்
சென்னை, ஜன. 6 : சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் தரவரிச
சென்னை, ஜன. 6 : சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா 4-6, 4-6 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 120-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோ ஸýடாவிடம் தோல்வி கண்டார். ஸýடா தகுதிச்சுற்றில் விளையாடி பிரதான சுற்றுக்கு முன்னேறி இப்போது அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் ரயோனிக்: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 31-வது இடத்தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிக் 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 83-வது இடத்தில் உள்ள இஸ்ரேலின் டூடி செலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே டூடி செலா சிறப்பாக ஆடி, ரயோனிக்கிற்கு கடும் சவால் அளித்தார்.
இதனால் இந்த செட் 12 கேம்களின் முடிவில் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற டைபிரேக்கர் செட்டில் ரயோனிக் 7-4 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் அவர் 7-6 (4) என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார். இந்த செட் 52 நிமிடங்கள் நீடித்தது.
இதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய ரயோனிக், முதல் கேமில் இரண்டு ஏஸ் ஸôர்ட்களை அடித்து தனது சர்வீûஸ கைப்பற்றினார். இதன்பிறகு டூடி செலாவும் அபாரமாக ஆட, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இதனால் 5-வது கேமை கடும் போராட்டத்திற்குப் பிறகே வென்றார் ரயோனிக். ஆனால் அடுத்த கேமில் டூடி செலாவின் சர்வீûஸ முறியடித்து 4-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் ரயோனிக்.
அடுத்த கேமில் ரயோனிக்கின் சர்வீûஸ முறியடிக்க டூடி கடுமையாகப் போராடினார். ஆனாலும் அந்த செட்டை இழக்கவில்லை ரயோனிக். 8-வது கேமில் டூடி செலா அருமையான ஸôர்ட்களை ஆடி ரயோனிக்கிற்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். இதனால் சற்று கோபமடைந்தார் ரயோனிக். இருப்பினும் அந்த செட்டை அவர் வென்றார். 9-வது கேமில் டபுள் பால்ட் தவறால் பின்னடைவைச் சந்தித்தார் ரயோனிக்.
இதனால் அந்த சர்வீஸ் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அதிலிருந்து மீண்டு அதை தன் வசமாக்கி 6-3 என்ற கணக்கில் வென்று இரண்டாவது செட்டை 37 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தார் ரயோனிக். இதன்மூலம் ரயோனிக் 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் அல்மாக்ரோ கடும் போராட்டத்துக்குப் பிறகு 4-6,7-6(8), 6-4 என்ற செட் கணக்கில் ஜப்பானில் சுகிதாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள நிகோலஸ் அல்மாக்ரோ, தரவரிசையில் 235-வது இடத்தில் உள்ள ஜப்பானின் யூகி சுகிதாவை காலிறுதியில் எதிர்கொண்டார். தரவரிசை அடிப்படையில் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதிபெற்ற அல்மாக்ரோ, அந்த சுற்றில் பெல்ஜியத்தின் ஸ்டீவ் டார்சிஸ் காயம் காரணமாக விலகியதால் நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்றார். காலிறுதி ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீûஸ சுகிதாவிடம் இழந்தார் அல்மாக்ரோ. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் அல்மாக்ரோவுக்கு கடுமையான சவால் அளித்தார் சுகிதா. இதனால் 7 கேம்களின் முடிவில் சுகிதா 5-2 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார்.
ஆனால் அடுத்த கேமில் சுகிதாவின் சர்வீûஸ அல்மாக்ரோ முறியடித்தார். இறுதியில் சுகிதா அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று 40 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் இருவருமே அபாரமாக ஆடினர். அல்மாக்ரோ கடுமையாகப் போராடினாலும், அபாரமான ஏஸ் ஸôர்ட்களை அடித்தார். இறுதியில் அந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. இதில் ஆரம்பத்தில் சுகிதா முன்னிலை பெற்றாலும், கடைசிக் கட்டத்தில் 8-10 என்ற கணக்கில் இழந்ததால், அந்த செட் 7-6 (8) என்ற கணக்கில் அல்மாக்ரோ வசமானது.
இதன்பிறகு நடைபெற்ற மூன்றாவது செட்டில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய அல்மாக்ரோ, இரு முறை சுகிதாவின் சர்வீûஸ முறியடித்தார்.
இறுதியில் 6-4 என்ற கணக்கில் 3-வது செட்டை வென்று ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் அல்மாக்ரோ, இந்த ஆட்டம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நீடித்தது.