முகப்பு
விளையாட்டு

11-வது முறையாக இறுதி ஆட்டத்தில் தமிழகம்

சென்னை, ஜன. 18: தமிழக கிரிக்கெட் அணி 11-வது முறையாக ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது.  1954-55, 1987-88-ம் ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை தமிழக அணி வென்றுள்ளது.  ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிகபட்

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:52 PM
பகிர்:

சென்னை, ஜன. 18: தமிழக கிரிக்கெட் அணி 11-வது முறையாக ரஞ்சி கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது.

 1954-55, 1987-88-ம் ஆண்டுகளில் ரஞ்சி கோப்பையை தமிழக அணி வென்றுள்ளது.

 ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிகபட்சமாக மும்பை அணி 39 முறை கோப்பையை வென்றுள்ளது.

Advertisement

 எதிர்பார்ப்பு: தமிழக அணியில் சிறப்பாக விளையாடிய பலர் தேசிய அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டனாக கூட பொறுப்பேற்றுள்ளனர். அவர்களில் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவரான ஸ்ரீகாந்த், 1975, 1979-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்த வெங்கட்ராகவன் ஆகியோர் முதன்மையானவர்கள்.

 இந்திய அணியில் இப்போது இடம்பெற்றுள்ள சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ள அபிநவ் முகுந்த், எஸ்.பத்ரிநாத், முரளி விஜய், எல்.பாலாஜி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட பல வீரர்கள் ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களே. வட மாநிலங்களே கோலோச்சி வந்த ரஞ்சி கோப்பை போட்டியில் கடந்த 10 சீசன்களில் 3 முறை தமிழக அணி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.

 இந்த இறுதி ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழு உறுப்பினர்கள் பார்வையிடவுள்ளனர். எனவே, ரஞ்சி கோப்பையை 3-வது முறையாக வெல்வதுடன் தேசிய அணியிலும் இடம்பெறும் வகையிலும் இந்த ஆட்டத்தில் தமிழக வீரர்கள் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments