முகப்பு
விளையாட்டு

இரட்டையர் இறுதியில் இந்திய ஜோடிகள்

கோவை, ஜூலை 19: கோவையில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாந்த்- காஸô விநாயக் சர்மா, சாகேத் மைனேனி-அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடிக

Updated On : 19 செப்டம்பர், 2012 at 11:00 PM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 11:40 PM

கோவை, ஜூலை 19: கோவையில் நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாந்த்- காஸô விநாயக் சர்மா, சாகேத் மைனேனி-அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடிகள் முன்னேறியுள்ளன.

 தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியவற்றின் சார்பில் கோவை, பெர்க்ஸ் பள்ளி டென்னிஸ் மையத்தில் இப் போட்டி நடைபெற்று வருகிறது.

 வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறு ஆட்டங்களில் இந்திய வீரர் என்.விஜய் சுந்தர் பிரசாந்த் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் úஸக் இட்ஸ்டெயினையும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கருண் உதய் சிங் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஞ்சித் விரலி முருகேசனையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

Advertisement

 தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாகெத் மைனேனி 3-6, 7-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜே மின் சோலை போராடி வென்றார். கொரியாவின் சுக் யோங் ஜியோங் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவின் அஸ்வின் விஜயராகவனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

 இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் சாகெத் மைனேனி- அருண் பிரகாஷ் ராஜகோபாலன் ஜோடி 6-7, 7-5, 12-10 என்ற செட் கணக்கில் இந்தியாவின் விவேக் ஷோகீன்- சுதன்வா சீதாராம் ஜோடியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 3 செட்களுமே கடும் சவாலானதாக அமைந்தது. இதனால் ஆட்டம் சுமார் 2.15 மணி நேரம் நீடித்தது.

 தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவின் விஜய் சுந்தர் பிரசாந்த்- காஸô விநாயக் சர்மா ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட்களில் கொரியாவின் சுக் யோங் ஜியோங்- சியோங் குக் ஓ ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.