முகப்பு
விளையாட்டு

திருச்சியில் மாநில ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

திருச்சி, மே 1: திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.  இந்த போட்டியில் தமிழக

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:34 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 9:08 PM

திருச்சி, மே 1: திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

 இந்த போட்டியில் தமிழகத்தின் முன்னணி ஹாக்கி அணிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மத்திய கலால் துறை, வருமான வரித் துறை, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 18 அணிகள் பங்கேற்றுள்ளன.

 முதல் போட்டியை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ஜூட் பெலிக்ஸ் செபாஸ்டின் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். முதல் நாள் போட்டியில் திருச்சி மாவட்ட அணி 5-3 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் மாவட்ட அணியை வென்றது. வருமான வரித் துறை அணி 7-3 என்ற கோல் கணக்கில் ஊட்டி ஆலோரை விளையாட்டுக் கழக அணியை வென்றது.

Advertisement

 தமிழ்நாடு சிறப்பு காவல்படை அணி 3-2 என்ற கோல் கணக்கில் பாரத ஸ்டேட் வங்கி அணியை வென்றது. சென்னை மாநகர காவல் துறை அணி (டை பிரேக்கர் முறையில்) 5-4 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மாவட்ட அணியை வென்றது. திருச்சி மாவட்ட அணி 1-0 என்ற கோல் கணக்கில் மதுரை திருநகர் ஹாக்கி அணியை வென்றது.

 முதல் சுற்று ஆட்டங்கள் புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெறுகின்றன. வியாழக்கிழமை காலிறுதி ஆட்டங்களும், வெள்ளிக்கிழமை அரையிறுதி ஆட்டங்களும், சனிக்கிழமை இறுதி ஆட்டமும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.