முகப்பு
விளையாட்டு

மாநில ஹாக்கி: நிஷாத் ஹாட்ரிக்கில் வருமான வரித்துறை வெற்றி

திருச்சி, மே 2 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வருமான வரித்துறை அணி வீரர் நிஷாத், ஹாட்ரிக் கோலடித்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.  திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:35 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:35 PM

திருச்சி, மே 2 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வருமான வரித்துறை அணி வீரர் நிஷாத், ஹாட்ரிக் கோலடித்து அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.

 திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

 இந்தியன் வங்கி வெற்றி: போ ட்டியின் 2-வது நாளான புதன்கிழமை காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்தியன் வங்கி அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை மாநகர காவல் துறை அணியை வென்றது. இந்தியன் வங்கி அணியின் வீரர்கள் ஞானவேல், பிலீப் மார்ட்டின், ஜேம்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

Advertisement

 நிஷாத் ஹாட்ரிக்: வருமான வரித்துறை அணி 7-3 என்ற கோல் கணக்கில் சென்னை சாய் அணியை வென்றது. வருமான வரித் துறை அணியின் வீரர் நிஷாத் ஹாட்ரிக் கோல் அடித்தார். இதே அணியின் வீரர்கள் சிவமணி, நிஜந்தன் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர்.

 வாடிப்பட்டி எவர்கிரேட் ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அணியை வென்றது. எவர்கிரேட் ஹாக்கி அணியின் வீரர் காந்தி 2 கோல்களும், குருசாமி 1 கோலும்

 அடித்தனர்.

 மதுரை ரிசர்வ் லைன் ஹாக்கி அணி 4-2 என்ற கோல் கணக்கில் திருச்சி லெவன் அணியை வென்றது. ரிசர்வ் லைன் அணியின் முத்துகுமார், பிரபு ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர்.

 இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை காலிறுதிப் போட்டியும், வெள்ளிக்கிழமை அரையிறுதிப் போட்டியும், சனிக்கிழமை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.