மாநில ஹாக்கி: இறுதிச் சுற்றில் தமிழ்நாடு போலீஸ், ஐ.ஓ.பி. அணிகள்
திருச்சி, மே 4 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் சனிக்கிழமை (மே 5) நட
திருச்சி, மே 4 : திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணிகள் மோதவுள்ளன. இந்த ஆட்டம் சனிக்கிழமை (மே 5) நடைபெறுகிறது.
திருச்சி ஜோ ஜோ ஹாக்கி சங்கம் சார்பில், தினேஷ் பி. கண்ணா நினைவு 2-ம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலுமிருந்து 18 முன்னணி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முதல் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வென்றது. தமிழ்நாடு போலீஸ் அணி வீரர்கள் டேவிட் ஆரோக்கியராஜ், திவாகரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
Advertisement
2-வது போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஐ.சி.எப். அணியை வென்றது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியின் அருள் ஸ்டாலின், பிட்டப்பா, முட்டப்பா, தாமு ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
3-வது இடத்துக்கான போட்டி சனிக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரயில்வே அணியும், ஐ.சி.எப். அணியும் மோதவுள்ளன. அதைத் தொடர்ந்து மாலை 3.30 மணியளவில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. போட்டியின் நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெறும்.