மாட்ரிட் ஓபன்: நடால், செரீனா சாம்பியன்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸýம் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸýம் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற இப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் நடால் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கை தோற்கடித்து சாம்பியன் ஆனார். இதன்மூலம் 55-வது ஏடிபி பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் நடால். காயத்திலிருந்து மீண்ட பிறகு 7 முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நடால், 5-ல் பட்டம் வென்றுள்ளார். இதேபோல் வாவ்ரிங்காவுடன் மோதிய 9 ஆட்டங்களிலும் நடால் வெற்றி கண்டுள்ளார்.
செரீனா சாம்பியன்: மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் செரீனா 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இதன்மூலம் தரவரிசையிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் செரீனா. ஒற்றையர் பிரிவில் செரீனா வென்ற 50-வது சாம்பியன் பட்டம் இது. 2004 முதல் தற்போது வரை செரீனாவும், ஷரபோவாவும் 12 முறை மோதியுள்ளனர். அவை அனைத்திலும் செரீனாவே வெற்றி கண்டுள்ளார்.
Advertisement
Advertisement
பிரையன் சகோதரர்கள சாம்பியன்: ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த ஜோடி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் 6-3, 6-7, 10-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜார்மி சார்டி-போலந்தின் லூகாஸ் குபோட் ஜோடியை வீழ்த்தியது.