முகப்பு
விளையாட்டு

சென்னை ஓபன் செஸ் தொடர்: வரும் 30-ம் தேதி தொடக்கம்

தமிழக செஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் சென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 25 டிசம்பர் 2014, 1:23 am IST
பகிர்:

தமிழக செஸ் சங்கம் சார்பில் நடத்தப்படும் சென்னை ஓபன் செஸ் தொடர் வரும் 30-ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் இந்தத் தொடரில் அனைத்து செஸ் வீரர்களும் பங்கேற்கும் வகையில் "ஏ', "பி', "சி' என மூன்று பிரிவில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

சர்வதேச தரவரிசை 1900-க்கும் மேல் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்கும், "ஏ' பிரிவு போட்டிக்கு மொத்தம் ரூ. 14 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ. 2 லட்சம் கிடைக்கும்.

Advertisement

குரூப் "பி' பிரிவில் செஸ் விளையாடத் தெரிந்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்த பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். சர்வதேச தரவரிசை 1599-க்கும் கீழ் உள்ளவர்கள் பங்கேற்கும் "சி' பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ 25,000 கிடைக்கும். இதில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ரீட்ங்ள்ள்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 044 25366464 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.