முகத்திரை, தலைப்பாகை அணிந்து விளையாட ஃபிபா ஒப்புதல்
கால்பந்து போட்டிகளின்போது வீரர்கள் தலைப்பாகை அணிந்தும், வீராங்கனைகள் தலையைச் சுற்றிலும் துணி அணிந்தும் விளையாட சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) அனுமதி அளித்தது.
கால்பந்து போட்டிகளின்போது வீரர்கள் தலைப்பாகை அணிந்தும், வீராங்கனைகள் தலையைச் சுற்றிலும் துணி அணிந்தும் விளையாட சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) அனுமதி அளித்தது.
தலைப்பாகை மற்றும் தலையைச் சுற்றி துணி அணிந்து கால்பந்து விளையாடுவது விபத்துக்கு வழி வகுக்கும் என்பதால் அதற்கு ஃபிபா தடை விதித்திருந்தது.
இந்த தடையை நீக்கக் கோரி ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையின்படி சில பரீட்சார்த்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முடிவுகள் சாதகமாக இருந்ததாகத் தெரிகிறது.
Advertisement
இதையடுத்து ஜூரிச் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச கால்பந்து சங்க வாரிய கூட்டத்தில், வீராங்கனைகள் தலையைச் சுற்றி துணியை அணிவதற்கும், வீரர்களின் தலைப்பாகைக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவது என முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஃபிபா செயலர் ஜெரோம் வால்கே கூறுகையில், "கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று ஆடவர் தலைப்பாகை அணிந்து ஆடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தலைப்பாகை, முகத்திரை இரண்டும் அணியின் சீருடையின் நிறத்தை ஒத்திருக்க வேண்டும்' என்றார்.