கேரளத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! காங்கிரஸ் 63, சிபிஐ 26 இடங்களில் வெற்றி!
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது குறித்து...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. ஆளும் இடதுசாரியை வெளியேற்றி காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
140 தொகுதிகளை உடைய கேரளத்தில் ஆட்சி அமைக்க 71 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி 63 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதேபோன்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
Advertisement