முகப்பு
விளையாட்டு

ஒலிம்பிக் ஓராண்டு கவுண்டவுன் தொடக்கம்!

அடுத்த வருடம் நாம் இங்கு நிச்சயம் வருவோம். நட்பு உணர்வுடனும் விளையாட்டு உணர்வுடனும்...

Updated On : 6 ஆகஸ்ட், 2015 at 4:22 PM
பகிர்:

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது.

அடுத்த ஒரு வருடத்தில் பிரேசிலில் 2016 ரியோ ஒலிம்பிக்ஸ் தொடங்க உள்ளது. இது தொடர்பாக ரியோ டி ஜெனிரோவில் ஆடல், பாடலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாச் கூறியதாவது:

அடுத்த வருடம் நாம் இங்கு நிச்சயம் வருவோம். நட்பு உணர்வுடனும் விளையாட்டு உணர்வுடனும். தென் அமெரிக்காவில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியை வாழ்த்துவோம். சரியாக ஒருவருடம் கழித்து உலகத்தின் கண் ஒலிம்பிக் போட்டியின்மீதுதான் இருக்கும். ஒலிம்பிக் போட்டியை மிகச்சிறப்பாக பிரேஸில் நடத்திக் காட்டும் என்றார்.

Advertisement

அடுத்த வருடம் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை இந்தப் போட்டி நடக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.