விளையாட்டு

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து அணி!

இன்று மீதமுள்ள ஆஸி. விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணியினர் சிரமப்படவில்லை.

எழில்

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து, ஆஷஸ் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

முதல் இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராடின் அபார பந்துவீச்சினால் 111 பந்துகளை சந்தித்த ஆஸ்திரேலிய அணி 60 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 85.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இந்நிலையில் 331 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸ் தொடங்கியது. 2-ம் நாளின் முடிவில், 62.2 ஓவர்களில், ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. 

இன்று மீதமுள்ள ஆஸி. விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணியினர் சிரமப்படவில்லை. 72.4 ஓவர்களில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து 4-வது டெஸ்ட் போட்டியை வென்றது.

இதனால், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், 3-1 என முன்னிலை பெற்று ஆஷஸ் தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

5-வது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT