விளையாட்டு

ஷிகர் தவன், கோலி சதம்! இந்தியா முன்னிலை! (ஹைலைட்ஸ் வீடியோ)

அதன்பின்னர், 74-வது ஓவரில் விராட் கோலியும் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

சநகன்

கேலேவில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஷிகர் தவன், கோலி ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேலேவில் புதன்கிழமை தொடங்கியது. அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் சுருண்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவன் 53 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-ம் நாளான இன்றும் இந்த ஜோடி மிகப் பொறுப்பாக ஆடியது. 57-வது ஓவரில் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் தவன்.  

உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 63 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து 44 ரன்கள் முன்னிலை பெற்றது. தவன் 110, கோலி 86 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

அதன்பின்னர், 74-வது ஓவரில் விராட் கோலியும் பவுண்டரி அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு அவர் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆடவந்த ரஹானே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

80-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 269 ரன்களை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT