விளையாட்டு

முதல் டெஸ்ட்: தோல்வியைத் தவிர்க்கப் போராடும் இலங்கை அணி!

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி, 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு...

சநகன்

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில், இலங்கை அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேலேவில் புதன்கிழமை தொடங்கியது. அஸ்வினின் அபார பந்துவீச்சால் இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 375 ரன்கள் குவித்தது. இதனால் 192 ரன்கள் முன்னிலை பெற்றது. இன்னமும் மூன்று நாள்கள் மீதமுள்ள நிலையில், கடினமான இலக்குடன் ஆட வந்த இலங்கை அணி, 2-ம் நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 5 ரன்களை எடுத்தது. சங்கக்காரா 1, தம்மிகா பிரசாத் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

3-ம் நாளான இன்றும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிரசாத்தின் விக்கெட்டை (3 ரன்கள்) வீழ்த்தினார் ஆரோன். அதன்பிறகு ஜோடி சேர்ந்த சங்கக்காராவும் மேத்யூஸும் ஓரளவு தாக்குப் பிடித்து ஆடினார்கள். ஆனால், 25-வது ஓவரில் சங்கக்காராவின் விக்கெட்டைக் கைப்பற்றினார் அஸ்வின். சங்கக்காரா 39 ரன்கள் எடுத்தார். அடுத்த ஓவரில் 39 ரன்களில் மேத்யூஸ் ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டை மிஸ்ரா வீழ்த்தினார்.

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை அணி, 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT