விளையாட்டு

டெஸ்ட்: இந்தியா பேட்டிங்; முரளி விஜய் டக் அவுட்!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

சநகன்

இந்தியா - இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், துரதிர்ஷ்டவசமாக 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில், ஷிகர் தவன், ஹர்பஜன் சிங், வருண் ஆரோனுக்குப் பதிலாக முரளி விஜய், பின்னி, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 3-வதாக களமிறங்கிய ரஹானே 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் மூத்த வீரர் குமார் சங்ககாராவுக்கு இது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி. தனது 134-ஆவது டெஸ்ட் போட்டியுடன் அவர் விடைபெறுகிறார். அவருக்கு இன்று பிசிசிஐ சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT