விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி

36 வருடங்களுக்குப் பின்னர் பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

சநகன்

ஈரோஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஸ்பெயினைத் தோற்கடித்தது. இதனையடுத்து இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச ஹாக்கி சங்கம் அறிவித்துள்ளது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி கடந்த 1980-ம் ஆண்டு கடைசியாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடியது. அதன்பிறகு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது, 36 வருடங்களுக்குப் பின்னர் பிரேசிலின் ரியோ-டி-ஜெனீரோவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் அணிகளில் 10வது அணியாக இந்திய அணி தேர்வாகியுள்ளது. மீதமுள்ள இரு அணிகள், ஓசியானியா கோப்பை, ஆப்ரிக்கா கோப்பை ஆகிய போட்டிகளின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT