இரண்டாவது ஐஎஸ்எல்: சென்னை சாம்பியன்
இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் சென்னையின் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த அக்.3 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.
மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு எஃப்சி கோவா, சென்னையின் எஃப்சி அணிகள் தகுதி பெற்றுள்ளன. கோவாவின் ஃபடோர்டாவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே அனல் பறந்தது.
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் ஹோலி கோவா அணிக்கும், பாலிவுட் ஜாம்பாவான் அபிஷேக் பச்சன் சென்னை அணிக்கும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் பந்து இரு கோல் கம்பங்களை சுற்றி வந்தாலும், யாரும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியில் மொத்தம் 5 கோல்கள் அடிக்கப்பட்டன. இறுதியில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.