இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் மகளிர் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த 2-வது சர்வதேச வீராங்கனை என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ்.
இன்று நடந்த ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 220 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு ஆடிய இந்திய அணி, 44.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் உள்ளன.
32 வயது மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அவர், மகளிர் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த 2-வது சர்வதேச வீராங்கனை என்கிற பெருமையைப் இந்தப் போட்டியின் மூலம் பெற்றார்.
இங்கிலாந்து மகளிர் அணியைச் சேர்ந்த 35 வயது சர்லோட் எட்வர்ட்ஸ் 185 ஒருநாள் போட்டிகளில் 5812 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதற்கடுத்த இடத்தில் உள்ள மிதாலி ராஜ், 157 போட்டிகளில் 5029 ரன்கள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.