விளையாட்டு

விரைவில் திருமணம் செய்யவிருக்கும் ஹர்பஜன் சிங் - கீதா ஜோடி!

விரைவில் ஹர்பஜன் - கீதா பஸ்ரா திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என...

எழில்

கடந்த வெள்ளிக்கிழமை தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடிய ஹர்பஜன் சிங், விரைவில் திருமணத்துக்குத் தயாராக இருக்குமாறு தனது நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அவருடைய திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் பாலிவுட் நடிகை கீதா பஸ்ராவும் காதலித்து வருகிறார்கள். இதுபற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசியது கிடையாது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளன்று கீதாவின் பாலிவுட் படம், செகண் ஹேண்ட் ஹஸ்பண்ட் என்கிற படமும் வெளியானது. படத்துக்கும் கீதாவின் நடிப்புக்கும் மோசமான விமரிசனங்கள் கிடைத்தாலும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் தோன்றும் ஹர்பஜன் சிங்கும் கீதா பஸ்ராவும் காதல் ஜோடிகளாகக் ண்பிக்கப்படுகிறார்கள். இப்போது இந்தக் காட்சி நிஜத்திலும் அரங்கேற உள்ளது. 

தனது பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நண்பர்களிடம் விரைவில் திருமணத்துக்குத் தயாராக இருங்கள் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன், இந்தச் சமயத்தில் திருமணத்தை நடத்திக்கொள்ள விரும்புகிறார் எனத் தெரிகிறது. விரைவில் ஹர்பஜன் - கீதா பஸ்ரா ஜோடியின் திருமண அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT