விளையாட்டு

ஆஷஸ் தொடர் போருக்குச் சமமா? மஞ்ச்ரேக்கர்-பீட்டர்சன் ட்விட்டரில் காரசார விவாதம்!

விளையாட்டுப் போட்டியை ஒருபோதும் போர் எனச் சொல்லக் கூடாது. உண்மையாகப் போரில் ஈடுபட்டவர்களுக்கு...

சநகன்

இன்றுமுதல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

ஆஷஸ் தொடரை போர் என்று இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பீட்டர்சன் பதிலளித்தபோது, இதை விளையாட்டுப் போர் எனலாம் என்றார். இதுதொடர்பாக இருவருக்கும் ட்விட்டரில் நடந்த விவாதம் பின்வருமாறு:

மஞ்ச்ரேக்கர்: அபத்தம்! ஒரு வீரர் ஆஷஸ் போட்டியை போர் என்கிறார். உண்மையான போர்ச் சூழலில் இல்லாத ஒருவரால் தான் இப்படிச் சொல்லமுடியும்.

கெவின் பீட்டர்சன்: சஞ்சய், ஆஷஸ் தொடரில் விளையாடிய வீரர்களால் மட்டும் நான் என்ன சொன்னேன் எனப் புரிந்துகொள்ள முடியும்.

மஞ்ச்ரேக்கர்: விளையாட்டுப் போட்டியை ஒருபோதும் போர் எனச் சொல்லக் கூடாது. உண்மையாகப் போரில் ஈடுபட்டவர்களுக்கு அது மரியாதை அளிப்பதாக இருக்காது. ஆனால் நீங்கள் என்ன அர்த்தத்தில் சொல்கிறீர்கள் என்பது புரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT