விளையாட்டு

சச்சினுடன் இணைந்து விம்பிள்டன் போட்டியை ரசித்த கோலி - அனுஷ்கா ஜோடி!

நேற்று நடந்த ஆண்கள் அரையிறுதிப் போட்டிகளை சச்சின் - அஞ்சலி, கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்கள்.

எழில்

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விம்பிள்டன் போட்டியை நேரில் சென்று ரசிப்பார் சச்சின். இந்த வருடம் அவர் தன் மனைவியுடன் லண்டனுக்குச் சென்று போட்டிகளைப் பார்த்து வருகிறார்.

இந்த வருடம் விராட் கோலி - அனுஷ்கார் சர்மா ஜோடியும் விம்பிள்டன் போட்டியைப் பார்க்க வந்துள்ளது. நேற்று நடந்த ஆண்கள் அரையிறுதிப் போட்டியை சச்சின் - அஞ்சலி, கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிகள் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளார்கள். இவர்கள் நால்வரும் இணைந்து போட்டியை ரசித்த புகைப்படம், விம்பிள்டனின் அதிகாரபூர்வ ட்விட்டரில் பகிரப்பட்டது.

கோலி - அனுஷ்கா ஆகிய இருவரும் இப்போது விடுமுறையைக் கழித்து வருகிறார்கள். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்றார்கள். இப்போது லண்டன் வந்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT