விளையாட்டு

தடையா? அப்படின்னா? ஜிம்பாப்வே மேட்ச் அப்டேட் பற்றி ட்வீட் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

இன்று இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடப்பதால் அது தொடர்பான அப்டேட்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.

எழில்

ஐபிஎல் சூதாட்டப் புகார் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த விசாரணை முடிந்த நிலையில் தற்போது நீதிபதி லோதா தனது தீர்ப்பை அறிவித்துள்ளார். அதன்படி, சென்னை, ராஜஸ்தான் அணிகள் அடுத்த இரு வருடங்களுக்கு ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இதுவரை சென்னை, ராஜஸ்தான் அணிகள் அதிகாரபூர்வமாக அறிவிப்புகள், கருத்துகள் எதுவும் வெளியிடவில்லை. சிங்கங்களே நம்பிக்கையுடன் இருங்கள். நாம் மீண்டும் வருவோம். படம் இன்னமும் மீதமுள்ளது என்று சென்னை ஐபிஎல் அணியின் மருத்துவர் டி.மது ட்வீட் செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஐடி, ரீட்வீட் செய்தது. சரி, ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில் என்ன தகவல் சொல்லப்பட்டுள்ளது?

ஒன்றுமில்லை. தங்களுக்கும் லோதா தீர்ப்புக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்று இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 3-வது ஒருநாள் போட்டி நடப்பதால் அது தொடர்பான அப்டேட்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. #RoyalsQuizDay என்கிற ஹாஷ்டேகில் இந்திய அணியில் இடம்பிடித்த ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. மேலும், மற்றொரு ராஜஸ்தான் வீரரான இந்திய அணி கேப்டன் ரஹானே அவுட் ஆகும்போது அப்டேட் செய்தது. மற்றபடி, லோதா தீர்ப்பு என்று ஒன்று சொல்லப்பட்டதாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம் காட்டிக்கொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT