விளையாட்டு

தோனி இல்லாத ஐபிஎல்-லை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை: கவலைப்படும் சுனில் கவாஸ்கர்

தோனிக்கு இப்போது 34 வயது. இன்னும் சில வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்.

எழில்

முன்னாள் நீதிபதி லோதா, ஐபிஎல் சூதாட்டப் புகார் தொடர்பாக இன்று தீர்ப்பு கூறியதை அடுத்து சென்னை, ராஜஸ்தான் அணி வீரர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை அணி வீரர்கள் எந்த அணியில் அடுத்த ஐபிஎல்-லில் ஆடுவார்கள் என்று சென்னை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில், லோதாவின் தீர்ப்பு குறித்து கவாஸ்கர் கூறும்போது:

தோனிக்கு இப்போது 34 வயது. இன்னும் சில வருடங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார். அதனால் அவர் இல்லாத ஐபிஎல்-ஐ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சங்கடத்துடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால். ஏற்கெனவே 3-4 வீரர்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கவலையுடன் இருப்பார்கள். அதேசமயம் மதிப்புமிக்க நீதிபதிகளின் தீர்ப்பை யாரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது.

அடுத்த ஐபிஎல் ஆரம்பிக்க இன்னும் 8 மாதங்கள் உள்ளன. எனவே 2 புதிய அணிகளைச் சேர்க்க பிசிசிஐக்கு கஷ்டம் எதுவும் இருக்காது. இந்திய கிரிக்கெட்டின் இந்த நிலைமைக்கு ஐபிஎல்-ஐ காரணம் சொல்லமுடியாது. ஐபிஎல்-லால் இந்திய வீரர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT