விளையாட்டு

டேவிஸ் கோப்பை: சோம்தேவ் அதிர்ச்சி தோல்வி; சமநிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள்!

முதல் இரண்டு செட்களை வென்றபிறகு சோம்தேவால் அடுத்த 3 செட்களில் ஒன்றைக் கூட வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம்...

எழில்

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை ஆசியா-ஓசியானா குரூப்-1 டென்னிஸ் போட்டி நியூஸிலாந்தில் இன்று தொடங்கியது. 

இன்று நடைபெற்ற முதல் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ்சை எதிர்த்து ஆடினார். இதில் சோம்தேவை 4-6, 4-6, 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்றார் மைக்கேல் வீனஸ். முதல் இரண்டு செட்களை வென்றபிறகு சோம்தேவால் அடுத்த 3 செட்களில் ஒன்றைக் கூட வெல்ல முடியாமல் போனது துரதிர்ஷ்டம். தரவரிசையில் சோம் தேவ் 148-வது இடத்திலும் வீனஸ் 548-வது இடத்திலும் உள்ளார்கள்.

முதல் போட்டியில் தோற்றுப் போனதால் அடுத்த ஒற்றையர் ஆட்டத்தில் கட்டாயமாக வெல்லவேண்டிய நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. இதில் 151-வது தரவரிசையில் உள்ள இந்தியாவின் யுகி பாம்ப்ரி, 345-வது இடத்தில் உள்ள ஜோஸ் ஸ்டாதமைச் சந்தித்தார்.  6-2 6-1 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார் பாம்ப்ரி.

இதனால் முதல் நாளில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, செப்டம்பரில் நடக்க உள்ள உலக குரூப் பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறும். நியூசிலாந்தில் தற்போது 5-7 டிகிரி வெப்பம் நிலவுகிறது. எதிர்த்து விளையாடும் வீரர்களை விடவும் சீதோஷ்ண நிலையே இந்திய வீரர்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

ஜெயலலிதா பிறந்த நாள்: ஏழைகளுக்கு நல உதவி

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

SCROLL FOR NEXT