முகப்பு
விளையாட்டு

கிரிக்கெட் வீரர்களின் மனைவி, காதலிகளுக்கு இலங்கை டூரில் அனுமதி மறுப்பு!

கடந்த ஒருமாதமாக ஓய்வில் இருக்கிறார்கள். தங்கள் குடும்பத்துடன் போதுமான அளவு...

Updated On : 31 ஜூலை, 2015 at 12:02 PM
பகிர்:

இலங்கை செல்லும் இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தில் கிரிக்கெட் வீரர்களின் மனைவி, காதலிகளுக்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை செல்லும் பெரும்பாலான வீரர்கள் கடந்த ஒருமாதமாக ஓய்வில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் போதுமான அளவு நேரத்தைச் செலவழித்துவிட்டதால் இலங்கைப் பயணத்தில் அவர்களுக்கு அனுமதி இல்லை என வீரர்களிடம் பிசிசிஐ தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், இந்தத் தொடரில் இந்திய அணி ஆடவிருக்கும் பயிற்சி ஆட்டத்தின்போது அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி உடன் இருக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது. இப்போது அவர் ஆஷஸ் போட்டிக்காக ஸ்கை ஸ்போர்ட்ஸில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் தேதிகளில் பிசிசிஐ மாற்றம் செய்ததால் ஏற்கெனவே செய்த ஒப்பந்தப்படி அவரால் பயிற்சி ஆட்டத்தின்போது இந்திய அணியுடன் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும் முன்பு இந்திய அணியுடன் இணைந்துவிடுவார் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

Advertisement

முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.