விளையாட்டு

நார்வே செஸ்: கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி! ஆனந்த் டிரா

அதிர்ச்சியடைந்த கார்ல்சன் மிகவும் வருத்தத்துடன் அரங்கை விட்டு வெளியேறினார்.

சநகன்

10 முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் மூன்றாவது நார்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சன் எதிர்பாராத விதத்தில் தோல்வி அடைந்துள்ளார். நேற்றைய போட்டியின் ஒரே டிரா, ஆனந்த் - பெபியானோ கருணா ஆட்டத்தில் கிடைத்தது.

உலகின் முன்னணி வீரர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டி நேற்று தொடங்கியது. இதற்கு முன் நடந்த இரு நார்வே செஸ் போட்டிகளிலும் கார்ல்சன் வெல்லாததால் இந்தப் போட்டியை வெல்ல அவர் ஆர்வத்துடன் உள்ளார்.

டொபலோவுடனான போட்டியில் 60-வது நகர்த்தலின்போது கார்ல்சன் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால், போட்டியின் விதிமுறைப்படி அவருக்குரிய நேரங்களைப் பயன்படுத்தியிருந்ததால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கார்ல்சன் மிகவும் வருத்தத்துடன் அரங்கை விட்டு வெளியேறினார். ஆனந்த் - பெபியானோ இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது.

இரண்டாவது சுற்றில், ஆனந்த் அனிஷ் கிரியுடனும் கார்ல்சன் பெபியானோவுடனும் மோதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT