விளையாட்டு

நார்வே செஸ்: தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கும் கார்ல்சன்!

இன்றைய 4-வது சுற்றில், கார்ல்சனைச் சந்திக்கிறார் ஆனந்த். இதில் அவர் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுகிறார்.   

சநகன்

உலகின் முன்னணி செஸ் வீரர்கள் கலந்துகொள்ளும் மூன்றாவது நார்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் அனிஷ் கிரியுடன் டிரா செய்ததன் மூலம் அரைப் புள்ளிகள் பெற்றுள்ளார் உலக சாம்பியன் கார்ல்சன். முதலிரண்டு சுற்றுகளிலும் தோல்வி அடைந்த கார்ல்சனுக்கு இது பெரிய ஆறுதலை அளித்துள்ளது.

இரண்டாவது சுற்றின் முடிவில் ஒரு புள்ளியும் இல்லாமல் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட கார்ல்சன், இப்போது அரைப்புள்ளிகள் பெற்றாலும் தொடர்ந்து கடைசி இடமான 10-வது இடத்தில்தான் உள்ளார்.

ஆனந்த் - அலெக்ஸாண்டர் கிரிஸ்சுக் இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. தொடர்ந்து மூன்று சுற்றுகளிலும் டிரா செய்ததால் 1.5 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளார் ஆனந்த்.

நாகமுரா, டொபலோவ் ஆகிய இரு வீரர்களும் 2.5 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார்கள். அனிஷ் கிரி 2 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.

இன்றைய 4-வது சுற்றில், கார்ல்சனைச் சந்திக்கிறார் ஆனந்த். இதில் அவர் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடுகிறார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT