நார்வே செஸ்: முதல் வெற்றியைப் பெற்றார் கார்ல்சன்; ஆனந்த் டிரா
நார்வே செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்....
நார்வே செஸ் போட்டியின் ஐந்தாவது சுற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன். விஸ்வநாதன் ஆனந்த் - நாகமுரா இடையே நடந்த போட்டி டிரா ஆனது.
நேற்று நடந்த ஐந்தாவது சுற்றில் கிரிஸ்சக்கை வீழ்த்தினார் கார்ல்சன். இதன்மூலம் இந்தப் போட்டியில் முதல்முறையாக ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார்.
நாகமுராவுக்கு எதிரான போட்டியை எளிதான முறையில் டிரா செய்தார் ஆனந்த். அவர் 2.5 புள்ளிகளுடன் அனிஷ் கிரியுடன் இணைந்து 3-ம் இடத்தில் உள்ளார். டொபலோவ் 4.5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
Advertisement