விளையாட்டு

தோனி மனிதர் தானா?: பத்ரிநாத் ஆச்சரியம்

தன் மீதான எதிர்பார்ப்பு, ஆட்ட முடிவுகளில் இருந்து விலகியே இருப்பார். அதனால் பெரும்பாலான நேரங்களில்...

எழில்

தன் மீதான எதிர்பார்ப்பு, ஆட்ட முடிவுகளில் இருந்து விலகியே இருப்பார். அதனால் பெரும்பாலான நேரங்களில் தோனியால் சரியான முடிவுகளை எடுக்கமுடிந்தது என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் குறிப்பிட்டுள்ளார்.

தோனி பற்றி ஓர் இணையத்தளத்துக்கு அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியதாவது:

டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பைப் பட்டம், சாம்பியன்ஸ் டிராபி, 2 ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள். இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன். அபாரமான விக்கெட் கீப்பர், பயமில்லாத தலைவன், ஒருநாள் போட்டியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்/ஃபினிஷர். வலிமையான ஆனால் அடக்கமான மனிதர். சாதாரண வாழ்க்கை வாழ்பவர். தோனி ஒரு மனிதர் தானா என்பதை நம்ப கடினமாக உள்ளது.

அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டங்களில் விளையாடிய அனுபவத்தில்  சொல்கிறேன், எங்கள் அணி திறமையுடன் ஆடி பெரிய ஸ்கோரை சேஸ் செய்திருக்கும், அல்லது மோசமாக விளையாடி தோற்றுப் போயிருக்கும், இரண்டிலும் தோனியின் நடத்தையில் வித்தியாசம் எதுவும் இருக்காது. தன் மீதான எதிர்பார்ப்பு, ஆட்ட முடிவுகளில் இருந்து விலகியே இருப்பார். அதனால் பெரும்பாலான நேரங்களில் அவரான சரியான முடிவுகளை எடுக்கமுடிந்தது.

ஒரு கிரிக்கெட் வீரராக என்னை நான் கேட்டுக்கொள்ளும் கேள்வி. மிகவும் அழுத்தம் கொடுக்கும் போட்டி. நான் தான் ஃபீல்டிங் கேப்டனாக உள்ளேன். எதிரணி 10 பந்துகளில் 20 ரன்கள் அடிக்கவேண்டும். ஆடுகளத்தில் எந்த பேட்ஸ்மேன் இருக்கக்கூடாது என்று நினைப்பேன்? எனக்கு விடை தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT