விளையாட்டு

5 விக்கெட் இழப்புக்கு இங்கிலாந்து 304 ரன்கள்

தினமணி

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 104.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது.

இதனால் அந்த அணி 4-ஆம் நாளில் பாகிஸ்தானை விட 201 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இங்கிலாந்தின் எட்பாஸ்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 86 ஓவர்களில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 136 ஓவர்களில் 400 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் அசார் அலி அதிகபட்சமாக 139 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து, 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து, 4-ஆம் நாளான சனிக்கிழமை 104.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. ஜானி பேர்ஸ்டோவ் 33 ரன்கள், மொயீன் அலி 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT