ஆசிய கோப்பை டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது 4-ஆவது லீக் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 4-ஆவது வெற்றியைப் பெற்ற இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 59 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்தார். ஸ்மிருதி மந்தனா, வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலா 21 ரன்கள் எடுத்தனர்.
இலங்கைத் தரப்பில் ஜெயங்கனி, வீரகோடி, பிரபோதனி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி, இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆட்டம் கண்டது. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்தியத் தரப்பில் பிரீத்தி போஸ், இக்தா பிஸ்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பாங்காக்கில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் நேபாளத்தைச் சந்திக்கிறது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.