ஜூலை 6-ல் மே.இ. தீவுகள் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி
மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 6 ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்குகிறது.
புது தில்லி: மேற்கு இந்திய தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 6 ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளுடன் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக ஜூலை 6 ஆம் தேதி செயின்ட் கிட்ஸ் செல்லும் இந்திய அணி, இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.
ஜூலை 21 ஆம் தேதி ஆண்டிகுவாவில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி ஜூலை 30 ஆம் தேதி ஜமைக்காவிலும், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி செயிண்ட் லூசியாவிலும், நான்காவது போட்டி ஆகஸ்ட் 18 ஆம் தேதி டிரிணிடாட் மற்றும் டுபாகோவிலும் தொடங்குகிறது.
Advertisement